Monday, June 16, 2008

கேயாஸ் (chaos) தியரி

இப்பொழுதுதான் "தசாவதாரம்" பார்த்துவிட்டு வந்தேன். ஆனால் இப்பதிவு தசாவதாரத்தைப் பற்றியதல்ல, அதில் குறிப்பிடப்படும் கேயாஸ் (CHAOS) தியரியைப் பற்றியது. எழுத்தாளர் சுஜாதா எழுதியது.

சுஜாதாவின் கற்றது பெற்றதுவுமில் கேயாஸ் தியரியைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.



கேயாஸ் (chaos) தியரி:
லொரென்ஸ் என்பவர் அறுபதுகளில் முதலில் அறிவித்த சித்தாந்தம் இது. லொரென்ஸின் ஆதார மேற்கோள் ஒன்று விஞ்ஞானிகளை/அறிவாளிகளை மிகவும் சிந்திக்க வைத்து, இது ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு கேயாஸ் தியரி முக்கியமடைந்தது.


பட்டாம்பூச்சி விளைவு(Butterfly Effect):
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, சூழ்நிலையில் மிகச்சிறிய மாறுதலை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் பொறுத்து சூழ்நிலையில் நிகழ்வது, நிகழ்ந்திருக்க வேண்டியதுடன் வேறுபடுகிறது. எனவே, ஒரு மாதத்தில் இந்தோனேசிய கடற்கரையை நாசமாக்கவிருந்த சுழற்காற்று நிகழ்வதில்லை.. அல்லது, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகளாவியதாக இருக்கும் என்பதே அந்தத் தியரியின் அடிப்படை.

உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கொள்ளலாம் இந்த தியரியின் அடிப்படையில். அதே சமயம் ஒரு மனிதனின் செயல்பாடு ஒரு நிகழ்வின் முடிவை மாற்றிவிடலாம் என்பதாக உள்ளது இந்தத் தியரியின் மூலம்.

மெய்ஞானம்:
"நம் எண்ணங்களே ஆகாயத்தை உருவாக்குகிறது" என்கிறது மெய்ஞானம். ஆகாயம் என்பதனை அதில் உள்ள நிகழ்வினை எனக்கொண்டால் மேலே உள்ள தியரிக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை என்பதாக உள்ளது. அதே சமயம் மெய்ஞானம் விதி எனும் கோட்பாடினைக் கூறி இந்த உலகில் நடக்கவிருப்பவையை மாற்றமுடியாது எனவும் கூறுகிறது. இந்த விதி எனும் சதிதான் இரண்டுக்குமான முரண்பாடாக உள்ளது.
இது தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள பெரிய இடைவெளி. விஞ்ஞானம் ஒவ்வொன்றினையும் தனித்தனியாக கண்டு வருகிறது. அதனையும் மெய்ஞானம் கண்டவற்றுடன் இணைத்தால் உலகம் மிக எளிமையாகிவிடும்.

இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு குவாண்டம் விஞ்ஞானம் கண்ட பதில், பொருள் (partical) எதிர்பொருள் (antiparticle) ஆகியவை இந்த உலகில் சம அளவில் இல்லை எனவும் அதன் காரணமாக அணுக்கள் உருவாகி இந்த உலகம் உருவாகியுள்ளது என்பதாகக் கண்டுள்ளது. அதற்கான காரணம் அணுவில் உள்ள weak force-னால் நடக்கும் வினைகளில் பெரும்பான்மையான வினைகளில் சமதளங்களை (symmetry) ஒத்துக்கொள்வதில்லை என்பதாகக் கண்டுள்ளது. அதாவது அந்த வினைகளினால் நடக்கும் மாற்றங்களை மீட்டெடுக்க முடியாது. இந்த குவாண்டம் இயலின் அடிப்படையில் உலகில் நடக்கும் நிகழ்வுகள் நடந்தே தீரும். அதே சமயம் சமதளங்களை ஒத்துக்கொள்ளும் வினைகளை மீட்டெடுக்க முடியும் அதன் அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகளை மீட்டெடுக்க முடியும். இந்த இரண்டும் எந்த அளவு நடக்கின்றன என்பதனை விளக்கமாகப் பார்ப்போம்,

இயற்பியல் விதிகள் C,P,T எனும் சமதள அடிப்படையை ஒத்துப்போக வேண்டும். இதனை C,P,T விதி என்கிறார்கள். இதில்

C- Charge(Means Laws are same for particle/Anti particle)
P- Right/Left(Means Laws are same for Mirror image of a partilce or spin)
T- Time (Means Reverse the direction of motion of all particles, the system should go back to what it was at earlier times- Past/Future)

அணுவின் நான்கு விசைகளான Weak force, Strong force, Electromagnetic force & Gravitational force இவைகளில் gravitational force ஐத் தவிர்த்து மற்ற மூன்று விசைகளின் செயல்பாடுகளில் C,P,T விதியினை அடிப்படையில் பார்ப்போமானால்

Electromagnetic force - Obey C,P,T Symmetry (1)
Strong force - Obey C,P,T Symmetry (2)
Weak force - Obey C,P symmetry (3)
Weak force - Does not obey C,P symmetry (4) (in certain particles called K-mesons)
Weak force - Does not obey C symmetry (5)
Weak force - Does not obey P symmetry (6)
Weak force - Does not obey T symmetry (7)

எனும் ஏழுவிதமாக வினைகளின் செயல்பாடுகளை வகைப்படுத்தலாம். உருவாகும் அணுவின் கூறுகள் 7. (3 குவார்க்குகள் இணைந்து ஒரு புரோட்டான், 3குவார்க்குகள் இணைந்து ஒரு நியுட்ரான் மற்றும் ஒரு எலெக்ட்ரான் ஆக 7). மனிதனின் புலன்களின் மூலம் உணரும் ஏழு ஸ்வரங்கள், ஏழு நிறங்கள், ஏழு ருசிகள்... எனக் கொள்ளலாமா!!!!!!!

மேலும் இதனை நான்காக வகைப்படுத்தலாம்,

Electromagnetic force - Obey C,P,T Symmetry (1)- இது ஒன்று
Strong force - Obey C,P,T Symmetry (2)- இது இரண்டு
Weak force - Obey C,P symmetry (3)- இது மூன்று

Weak force - Does not obey C,P symmetry (4)
Weak force - Does not obey C symmetry (5)
Weak force - Does not obey P symmetry (6)
Weak force - Does not obey T symmetry (7)-
இவை நான்கும் இணைந்த நான்கு

இப்போது மனிதனின் எண்ணங்களும் நான்கு எனும் ஞானிகளின் கூற்றினை மேலே உள்ள வினைகளின் செயல்பாடுகளை அதற்கான அடிப்படையாக கொண்டால், 'Obey' மூன்றும், 'Does not obey' நான்கும் கொண்டதாக உள்ளது. இதனை நம் மனம் எனும் சித்தி, புத்தி, அஹங்காரம் இவை மூன்றின் செயல்பாடுகளாகக் கொண்டு பார்த்தால் மனிதர்களின் பார்வை மூன்றில் இரண்டு 'Does not obey'யைக் கொண்டும், ஒன்று 'Obey'யைக் கொண்டும் இயங்குவதாகக் கொண்டால் மூன்றில் இரண்டு எனும் விதத்தில் ஒட்டுமொத்த உலக மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படக்கூடியதே என்பதாக வருகிறது.

சரி, அது எப்படி 'Does not obey'யை இரண்டும் 'Obey'யை ஒன்று என தீர்மானிக்கலாம், மாறி இருக்கக்கூடாதா என நீங்கள் வினவலாம்.

இங்குதான் வருகிறது gravitational force.. எனது கருதுகோளின்படி gravitational force என்பது அணுவின் force துகள்களின் duality/ இருமைப்பண்பின் அலை வடிவம். அது தனியாக இல்லை. இதனால் அணுக்களின் இந்த 'Does not obey' எனும் செயல்பாடு என்னவாகிறது என்றால் அது அந்த அணுவின் 'Weak force'களின் இருமைப்பண்பில் அலை வடிவமான ஈர்ப்பு விசை அதிகரிப்பாக மாறிவிடுவதால், அணுக்களாக அல்லது பார்க்கும் (physical) பொருளாக மாறியுள்ளது.

அந்தப்படியான அணுக்களில் இருந்தே நாம் தோன்றியுள்ளதால் நம்முடைய பெருவாரியான எண்ணங்கள் 'does not obey' யினால் உருவான பொருள்(materialistic) சார்ந்தே இருக்கும். இதனை மாற்றி பெருவாரியானவர்கள் 'obey' எனும் கோட்பாட்டிற்கு கொண்டு வருவதே ஞானம் எனும் மெய்ஞானம், அதனை அறிய முற்படுவதே விஞ்ஞானம்.

அவ்வாறு மாறினால் புயல் என்ன மனிதனின் விதியையே மாற்றிவிடலாம், ஏனென்றால் 'Obey' எனும் விதியின் கீழ் வருவது இதுவும் தானே- T-Time(Means Reverse the direction of motion of all particles, the system should go back to what it was at earlier times- Past)

அதாவது தாயுமானவர் பாடலில் சொல்லியபடி 'சந்தகமும் இளமையோடு இருக்கலாம்'






மேலதிக வாசிப்புகள்


Butterfly effect


Chaos Theory

1 comment:

Srini said...

மிக மிக அற்புதமான விளக்கவுரை...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..