விஞ்ஞானத்தில் வினாடி-வினா
============================
1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?
நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீ¡¢ன் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.
2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தெரிவது ஏன்?
தண்ணீரின் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீரில் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீரின் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீரின் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.
3. மனித உடலில் உள்ள இரத்தத்தின் வகைகள் யாவை?
இரத்தத்தை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். அவை A, B, AB, O என்பனவாகும்.
4. நமது எடையில் இரத்தத்தின் எடை என்ன விகிதத்தில் உள்ளது?
நமது உடலின் எடையில் இரத்தத்தின் எடை 9% ஆகும்.
5. நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
சர்ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.
6. பருமனான கம்பி அல்லது மெல்லிய கம்பி இவற்றில் அதிக சுருதியை ஏற்படுத்த எந்த வகைக் கம்பி பயன்படுத்தப் படவேண்டும்?
மெல்லிய கம்பி பயன்படுத்தப்பட வேண்டும்.
7. சுரமானி என்றால் என்ன?
இழுத்துக் கட்டப்பட்டுள்ள கம்பிகளின் அதிர்வுகளைக் கண்டறியப் பயன்படும் கருவி சுரமானி என்பதாகும்.
8. தண்ணீரில் மூழ்கும் இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதப்பது ஏன்?
தண்ணீரின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைக் காட்டிலும் குறைவு. எனவே இரும்பு குண்டு நீ¡¢ல் மூழ்குகிறது.
பாதரசத்தின் அடர்த்தி எண் இரும்புக் குண்டின் அடர்த்தி எண்ணைவிட அதிகம். எனவே பாதரசத்தில் இரும்புக் குண்டு மிதக்கிறது.
9. மிக விரைவில் ஆவியாகும் திரவம் எது?
ஆல்கஹால்
10. மனித உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206
11. தங்கம், பாதரசம் இவற்றின் அடர்த்தி எண்களைக் கூறுக?
தங்கத்தின் அடர்த்தி எண் 19.3 கிராம். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6 கிராம்.
12. கடலின் ஆழம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
கடலின் அடிப்பகுதியில் ஒருவெடிகுண்டு வெடிக்கச் செய்வர். அந்த வெடியின் ஒலிகரையை வந்தடையும் நேரத்தை ஹைடிரோ போன்கள் என்ற இயந்திரத்தில் பதிவு செய்து கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர்.
13. ரயில் எஞ்சினின் முன் உள்ள விளக்குகளின் ஒளி அதிக தூரம் வரை தெரிகிறது. சாதாரண மின் விளக்குகள் அவ்வளவு தொலைவு தெரிவதில்லையே ஏன்?
ரயில் எஞ்சின் முன் விளக்குகளில் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆடிகள் தம் மீது விழும் ஒளியைப் பிரதிபலித்து வெகு தூரம் வரை பாய்ச்சும் தன்மை உடையது.
14. சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கி விடுகிறது. ஆனால் மிகப் பெரிய கப்பல் நீரில் மிதக்கிறது. அது எப்படி?
சிறிய இரும்புகுண்டு தண்ணீரில் மூழ்கும்போது அது வெளியேற்றும் தண்ணீ¡¢ன் அடர்த்தி எண்ணைவிட இரும்பு குண்டு அதிக அடர்த்தி உடையது. எனவே இரும்பு குண்டு நீரில் மூழ்குகிறது.
பெரிய கப்பல் நீரில் மிதக்கும் போது அதனால் வெளியேற்றப்படும் தண்ணீரின் அடர்த்தி கப்பலின் எடையைவிட அதிகம். எனவே கப்பல் மிதக்குகிறது.
15. மயக்கமடைந்தவர்களைத் தரையில் கிடத்தும் போது தலை சற்று தாழ்வாகவும், உடல் சற்று மேலாகவும் கிடத்த வேண்டும் ஏன்?
தலைப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக. ரத்த ஓட்டம் அதிகமானால் விரைவில் மயக்கம் தெளிவு பெறும்.
16. ஏரி, குளங்களில் காணப்படும் நீன் மேற்பகுதி வெப்பமாக இருக்கும். ஆனால் நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் ஏன்?
நீர் ஓர் அரிதில் கடத்தி, எனவே வெப்பம் நீ¡¢ன் மேற் பகுதியிலேயே ஆவியாகி சென்று விடுகிறது. ஆகவே நீரின் அடிப்பகுதி குளிர்ச்சியாக இருக்கிறது.
17. பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?
சர்ஐசக் நியூட்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி பூமியின் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். இவர் 1642 ஆம் ஆண்டு லிங்கன்ஷயர் எனும் இடத்தில் பிறந்தார்.
18. கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம் ஏன்?
கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக கழிவு நீர்வியர்வையாக வெளியேறுகிறது. குளிர்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதில்லை. எனவே குளிர் காலத்தில் நாம் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.
19. காற்று வேகமானி (Anemo meter) என்றால் என்ன? அதன் பயன் யாது?
காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவிக்கு காற்று வேகமானி என்று பெயர். இது வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
20. வானில் ஏற்படும் இடி, மின்னல் பூமியை வந்தடையும் போது இடி ஓசை இரண்டாவதாகவும் மின்னல் ஒளி முதலாவதாகவும் வந்தடைவதேன்?
ஒலியின் வேகத்தைவிட ஒளி (மின்னல்) பாயும் வேகம் அதிகம். எனவே இடி இரண்டாவதாகவும் மின்னல் முதலாவதாகவும் பூமியை வந்தடைகின்றன.
21. மனித உடலில் மார்பறையையும் வயிற்றறையையும் பி¡¢க்கும் சுவரின் பெயர் என்ன?
உதரவிதானம்.
22. எலும்பு மண்டலம் என்பது யாது? அதன் பயன் என்ன?
உடலில் அடங்கியுள்ள எல்லா எலும்புகளையும் மொத்தமாக எலும்பு மண்டலம் என்பர். இவை உடல் உறுப்புகளின் பாதுகாப்பிற்கும், ஆதரவு இயக்கம் ஆகியவற்றிற்கும் பயன்படுகின்றன.
23. தசைகளின் பயன் யாது?
உடல் உறுப்புகளின் அசைவிற்கும், இயக்கத்திற்கும் இணைப்பிற்கும் பயன்படுகிறது.
24. உணவு ஜீரண மண்டலம் என்பது யாது? அதன் பயன் யாவை?
வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சொ¢ப்பு நீர் சுரப்பிகளும் உணவு ஜீரண மண்டலம் ஆகும். இவை உணவு ஜீரணிக்கவும், உட்கிரகிக்கவுமே உதவுகின்றன.
25. சிறுநீரகங்கள் சா¢யான முறையில் வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத் தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.
26. கொதிக்க வைத்த பிறகு குளிர்ச்சியான நீரில் மீன் உயிர் வாழ முடியாது ஏன்?
நீரைக் கொதிக்க வைக்கும்போது மீன் சுவாசிகத் தேவையான ஆக்ஸிஜன் அந்நீரில் இருந்து வெளியேறி விடுகிறது. எனவே மீன் உயிர் வாழ முடிவதில்லை.
27. சளி பிடித்திருக்கும் போது காது சா¢யாகக் கேட்பதில்லையே ஏன்?
யூஸ்டேனியன் எனும் குழாய் சளிப் படலத்தினால் அடைக்கப்படுகிறது. எனவே செவிப்பறையின் காற்றழுத்தம் இருபுறமும் சமமாக இராது. இது செவிப்பறையின் அதிர்வை பாதிக்கிறது. எனவே சளி பிடித்திருக்கும் போது காது சரியாக கேட்பதில்லை.
28. இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?
மரங்கள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. எனவே இரவு நேரங்களின் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது.
29. நாம் உலகில் காணும் பொருட்கள் எவ்வகை நிலைகளில் காணப்படுகின்றன?
மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. 1. திண்ம நிலை 2. நீர்மநிலை 3. வாயு நிலை
30. அணு அமைப்பைப் பற்றி உலகுக்குச் சா¢யானபடி எடுத்துக் கூறிய அறிவியல் மேதை யார்?
ரூதர்•போர்டு
31. எலக்ட்ரான் பாதைகளைப் பற்றி ஆராய்ந்த அறிவியலார் யார்?
பா¢, லூயிஸ், லாங்யூர்.
32. மின்னாற் பகுப்பு விதி முறைகளைக் கண்டறிந்தவர் யார்?
மைக்கேல் பாரடே
33. அல்லி வட்டம் எத்தனை வகைப்படும்?
நான்கு வகைப்படும்.
34. மூட்டு என்றால் என்ன?
மனித உடலில் இரண்டும் அதற்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக இணைந்திருப்பது மூட்டு ஆகும்.
35. இரும்பின் வகைகளைக் கூறு?
இரும்பை மூன்று வகைகளாகப் பி¡¢க்கலாம்.
அவை யாவன 1. தேனிரும்பு 2. வார்ப்பிரும்பு, 3. எ•கு இரும்பு.
மின்சார வேலைகளைச் செய்யும் போது கையில் ரப்பர் உறை அணிந்து கொள்வது ஏன்?
ரப்பர் மின்சாரத்தைக் கடத்தாது. எனவே ரப்பர் உறை பயன்படுத்துகின்றனர்.
ஸ்பீடோ மீட்டர் (Speedo Meter) என்றால் என்ன?
கார், லாரி, ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் செல்லும்போது வேகங்களைக் கண்டு கொள்ள பயன்படும் கருவிக்கு ஸ்பீடோ மீட்டர் என்று பெயர்.
பெட்ரோல் டாங்கிகள் எவ்வகை வண்ணத்தால் பூசப்படுகிறது? ஏன்?
பெட்ரோல் டாங்கிகளுக்கு அலுமினிய வண்ணம் பூசப்படுகிறது. இவ்வண்ணம் காற்று உட்புகாமலும் எளிதில் துருப்பிடிக்காத வகையிலும் பாதுகாக்கிறது.
பால்மானியைப் பயன்படுத்தும் முறையை கூறுக?
பால் மானியின் மேற் பகுதியில் "W" என்றும், கீழ்ப் பகுதியில் "M" என்றும் குறிக்கப்பட்டிருக்கும், பாலினுள் மானி அமிழ்ந்திருக்கும் அளவினைக் கொண்டு பாலில் கலந்துள்ள நீ¡¢ன் விகிதத்தை அறியலாம். "M" என்ற குறியில் இருந்தால் கலப்பட மற்றது என அறியலாம்.
மூட்டுக்களின் வகைகள் யாவை?
மூட்டுக்களின் வகைகள் இரண்டு
அவை 1. அசையும் மூட்டு, 2. அசையா மூட்டு.
நம் கால்பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன?
பதினான்கு
நம் மனித உடலில் உள்ள முதுகெலும்புத் தொடா¢ன் நீளம் என்ன?
சுமார் 60 முதல் 70 செ.மீ. வரை
கேளா ஒலி அலைகள் என்றால் என்ன?
நம் செவிகளுக்கு நொடிக்கு 20 முதல் 20,000 வரை அடுக்கம் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்கும் சக்தி உள்ளது. நம் காதுகளுக்குக் கேட்க முடியாத ஒலி அலைகளை கேளா ஒலி அலைகள் எனக் குறிப்பிடுகின்றனர்.
சிறுநீ¡¢ல் அடங்கியுள்ள இயைபுகள் யாவை?
அவை என்ன விகிதத்தில் அடங்கியுள்ளன எனக் கூறுக?
சிறுநீரில் நீர் 96%, யூரியா 2%, யூரிக் அமிலம் 0.05%, அமோனியாக் கூட்டுப் பொருள் 0.05%, செயல்படா கார்மோன்கள் 1% அடங்கியுள்ளன.
பூமியின் புவியீர்ப்பு விசைக்கும் சந்திரனின் புவியீர்ப்பு விசைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பூமியில் ஒரு பொருளின் எடை 120 கிலோ என்றால் சந்திரனில் அதன் எடை 20 கிலோ மட்டுமே இதற்குக் காரணம் பூமியின் புவியீர்ப்பு விசை சந்திரனின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சுமார் 6 மடங்கு அதிகமாக உள்ளதேயாகும்.
கடலின் ஆழத்தைக் கணக்கிடும் அளவு முறையின் பெயர் என்ன?
பேத்தம் (Fathom)
முதல், முதல் சினிமா காட்சி எங்கு காட்டப்பட்டது?
1895ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பாரிஸ் நகரில் முதன் முதலாக பொதுமக்களுக்குச் சினிமா காட்சி காட்டப்பட்டது.
விசைத் தறியை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?
எட்மண்ட் கார்ட்ரைட் என்ற இங்கிலாந்து நாட்டு மேதை 1785ம் ஆண்டு விசைத்தறியைக் கண்டறிந்தார்.
ஒலி பெருக்கியைத் கண்டறிந்தவர் யார்?
ரைஸ் கெல்லாக் என்ற அமெரிக்க நாட்டுவிஞ்ஞானி 1924ம் ஆண்டு ஒலி பெருக்கிக் கருவியைக் கண்டறிந்தார்.
ரேடியத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
ரேடியத்தை மேரிகியூரி அம்மையாரும், அவர் கணவர் பியரிகியூரி என்பவரும் இணைந்து 1898ம் ஆண்டு ரேடியத்தைக் கண்டு பிடித்தார்கள்.
மின்னோட்டத்தின் அளவை அளக்கப் பயன்படும் அளவு முறையின் பெயர் என்ன?
கூலும் என்பதாகும். இவர் மின்னோட்ட அளவு பற்றி ஆய்வு நடத்திய ஓர் அறிவியல் அறிஞர். எனவே அவர் பெயரால் கூலும் என்றே கணக்கிடப்படுகிறது.
பலூனை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
1783ம் ஆண்டு ஜாக்கியுஸ் என்பவரும் ஜோசப் என்பவரும் கண்டறிந்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பால் பாய்ண்ட் (Ballpoint) பேனாவை கண்டுபிடித்தவர் யார்?
அமொ¢க்க நாட்டைச் சேர்ந்த ஜான்ஜே-லவ்டு என்ற விஞ்ஞானி 1888ம் ஆண்டு பால்பாய்ண்ட் பேனாவைக் கண்டறிந்தார்.
திரைப்படங்களில் பேசும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் யாவர்?
வார்னர் பிரதர்ஸ் என்ற அமொ¢க்க நாட்டவர் வார்னர் தியேட்டா¢ல் 1926ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
டெலி பிரிண்டர் என்றால் என்ன?
தந்தி மூலம் வரும் செய்திகளை உடனுக்குடன் அச்சிட்டுத் தருகின்ற இயந்திரம் "டெலி பிரிண்டர்" ஆகும். இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 50 வார்த்தைகளுக்கு மேலும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை பல இடங்களுக்கு அனுப்பவும் உதவுகிறது.
கடற்பாசிகளின் பயன் யாது?
கடற்பாசிகள் தாவரங்களுக்கு உரம் தயா¡¢க்கவும், கால் நடைகளுக்கு உணவு பொருட்களுடன் கலந்து கொடுக்கவும், மருத்துவத் துறையில் பலவகை மருந்துகள் தயாரிக்கவும், பயன்படுகிறது மேலை நாடுகள் சிலவற்றில் பக்குவப்படுத்தி உணவாகவும் பயன்படுகிறது.
மீன்களில் எத்தனை வகைகள் உள்ளன?
மீன்களில் சுமார் 1500 வகைகள் உள்ளன?
மீன்களிலேயே அதி வேகமாக நீந்தும் மீன் எது?
சுறாமீன்
உலகிலேயே அதிக அளவில் மின்சார ரயில்கள் எந்த நாட்டில் உள்ளன?
சோவியத் ரஷ்யாவில் உள்ளன.
பாக்டீரியாக்களினால் ஏற்படும் நன்மை யாவை?
பாக்டீரியாக்களால் பால் தயிராக மாறுகிறது. மேலும் தோல் பதனிடுதல், தேயிலை, புகையிலை ஆகியன பதப்படுத்தவும் கோக்கோ பானத்திற்கு வண்ணமும், மணமும் பாக்டீ¡¢யாக்களாலேயே ஏற்படுகிறது. மருத்துவத் துறையிலும் பாக்டீரியாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.
பாக்டீரியாக்களினால் ஏற்படும் தீமைகள் யாவை?
வெண்ணெய், காய்கள், பழங்கள், இறைச்சி வகைகள் மேலும் உணவுப் பொருட்கள் ஆகியன அழுகி கெட்டுப்போகவும் மனிதர்கள், தாவரங்கள் விலங்கினங்கள் ஆகியவற்றிற்குச் சிலவகை நோய்கள் ஏற்படவும் பாக்டீரியாக்களே காரணம் ஆகும். உணவு நச்சாவதற்கு (Food Poisoning) சிலவகை பாக்டீரியாக்களே காரணமாகும்.
மோட்டார் சைக்கிளை உலகுக்குக் காட்டியவர் யாவர்?
1848ம் ஆண்டு "எட்வர்டு பட்லெட்" என்ற இங்கிலாந்து நாட்டுமேதை கண்டறிந்தார். இதை 1885ம் ஆண்டு "டெய்ம்லர்" என்பவர் உலகறியச் செய்தார். முதன் முதலாக முனீச் நகரில் 1893ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயா¡¢க்கும் தொழிற்சாலை துவங்கப்பட்டது.
இயந்திரத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் யார்?
1861ம் ஆண்டு "ரிச்சர்டு ஹாட்லிங்" என்ற அமெரிக்க நாட்டவர் கண்டறிந்தார்.
திரைப்படங்களில் முதன் முதலாக இசையை ஒளிப்பதிவு செய்து ஒலிப்பரப்பிக் காட்டியவர் யார்?
1923ம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ம் நாள் "Dr. லீ டி பாரஸ்ட்" என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அறிமுகப்படுத்தினார்.
பெண்டுலத்துடன் கூடிய கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார்?
1657ம் ஆண்டு "கிறிஸ்டின் ஹைஜென்ஸ் என்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் கண்டறிந்தார்.
Friday, March 31, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எனக்குத் தெரிந்த தகவல்களுடன் சில தெரியாத தகவல்களையும் கற்றுக் கொண்டேன்.நன்று!!! மேலும் கடற்பாசிபற்றிய தகவல்களில்; மேலைநாட்டினர் பதப்படுத்தி உண்ணுமுண்; சீனா,யப்பான் ;கொறியா தாய்லாந்து போன்ற கீழைத் தேச நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் ; இதன் மருத்துவ குணத்துக்காகவும் ; உணவுப் பயன்பாட்டையும் தெரிந்து பயன் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.இதை ஓர் தொலைக்காட்சி ஆவணப் படத்தில் பார்த்தேன்.
யோகன் பாரிஸ்
Post a Comment