Tuesday, June 17, 2008

தசாவதாரத்தை இப்படியும் அலசலாமே?

தசாவதாரம் படத்தில் கமலின் பத்து அவதாரப் பெயர்கள் :

ரங்கராஜ நம்பி
கோவிந்த் சாமி
கிறிஸ்டியன் ப்ளெட்சர்
பல்ராம் நாயுடு
கிருஷ்ணவேணி பாட்டி
ஷிங்கென் நரஹாஷி
அவ்தார் சிங்
கலிபுல்லா கான்
வின்சென்ட் பூவராகன்
ஜார்ஜ் புஷ்

உலக அழிவிலிருந்து வேதங்களைக் காப்பாற்றி கடலுக்குள் ஒளித்து வைக்க – மச்சாவதாரம்
(உலக மக்களை Virus அழிவிலிருந்து காப்பாற்ற) சுனாமியை உருவாக்கும் பரந்தாமன் சிலையை கடலுக்குள் ஒளித்து வைக்க? - ரங்கராஜன் நம்பி.


தேவர்கள், பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் என்றும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர். வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு மேரு மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். வாசுகிப் பாம்பின் தலைப்பகுதியை தேவர்கள் பிடிக்கப் பயந்ததினால் அசுரர்களையும் சேர்த்துக் கொண்டனர். மத்துக்கு கீழே முட்டுக் கொடுக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தாங்கிபிடித்தாராம் கிருஷ்ணன். அவ்வாறு பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றியதுதான் காமதேனு, கற்பகவிருட்ஷம், லக்ஷ்மி , ஆலகால விஷம்,
Biotecnology விஞ்ஞானியாக வரும் கோவிந்த் Bio–Weapons ஆராய்ச்சியை தாங்குவதால் கூர்மாவதாரத்திற்கு ஒப்பிடலாமா?

பூமியைக் காக்க வராஹ அவதாரம்
மண்ணைக் காக்க (மணல் கொள்ளையை தடுக்க) – பூவராகன் (அட பெயர் பொருத்தத்தைக் கவனியுங்கள்)


ஹிரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ஹ அவதாரம்
கிறிஸ்டியன் ப்ளெட்சர் எனும் தீவிரவாதியை வதம் செய்ய - ஷிங்கென் நரஹாஷி (இங்கேயும் பெயர் பொருத்தம் சரி வருதோ?)


வாமனாவதாரத்தில் மூன்றடி நிலம் கேட்டார்
கபிபுல்லா –வாக எட்டடி உயரத்துடன் மசூதிக்காக நிலம் கொடை செய்கிறார்


பல்ராம் நாயுடு – அட பெயரிலேயே பலராமரா?


கிருஷ்ணவேணி – அடடே மீண்டும் ஒற்றுமை

மற்ற ஒற்றுமைகள் என்ன என்று அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
அவ்தார் சிங் - ????
ஜார்ஜ் புஷ்- ????
கிறிஸ்டியன் ப்ளெட்சர் - ????
இவ்வளவு யோசிச்சதுக்கு இப்பவே கண்ணைக்கட்டுதே!

No comments: